Home நாடு 2015 வரவு செலவு: அடுத்த ஆண்டு பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடக்கம்!

2015 வரவு செலவு: அடுத்த ஆண்டு பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடக்கம்!

683
0
SHARE
Ad

Thru-Traffic@-Ipoh-1-600கோலாலம்பூர், அக்டோபர் 11 – நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் 2015 வரவு செலவு திட்டத்தைச் சமர்ப்பித்தார்.

அதில், அடுத்த ஆண்டு பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்படவிருப்பதாகத் தெரிவித்தார்.

அவை,

#TamilSchoolmychoice

1. 59 கிலோமீட்டர் சுங்கை பெசி – உலு கிள்ளான் அதிவிரைவு நெடுஞ்சாலை (SUKE) இதன் மொத்த கட்டுமான செலவு 5.3 பில்லியன் ஆகும்.

2. தைப்பிங்கில் இருந்து பந்திங்கிற்கு 276 கிலோமீட்டர் தொலைவு மேற்கு கடற்கரை அதிவிரைவு நெடுஞ்சாலை. இதன் மொத்த செலவு 5 பில்லியன் ஆகும்.

3. 47 கிலோமீட்டர் டாமன்சாரா – ஷா ஆலம் நெடுஞ்சாலை (DASH) இதன் மொத்த கட்டுமான செலவு 4.2 பில்லியன்.

4. கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு அதிவிரைவு நெடுஞ்சாலை (EKVE) இதன் மொத்த கட்டுமான செலவு 1.6 பில்லியன்.

5. கிழக்குக் கடற்கரை  கெமாஸ் – மெந்தாகாப், ஜெராந்துத் – சுங்கை யு மற்றும் குவா மூசாங் – தம்பாட் இரயில் தண்டவாளங்களை மறுசீரமைக்கும் பணிக்கு செலவு 150 மில்லியன்.

6. செலாயாங் – புத்ராஜெயா இரண்டாவது  அதிவிரைவு இரயில் திட்டத்திற்கு செலவு 23 பில்லியன்.

7. பண்டார் உத்தாமா – ஷா ஆலம் மற்றும் கிள்ளான் எல்ஆர்டி 3 திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி 9 பில்லியன் ஆகும்.

இவ்வாறு நஜிப் தனது அறிக்கையில் தெரிவித்தார்.