Home இந்தியா இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

648
0
SHARE
Ad

nobelprize_660ஆஸ்லோ, அக்டோபர் 10 – 2014 -ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டது.

அதில், குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக போராடி வரும் கைலாஷ் சத்யார்த்தி அமைதிக்கான நோபல் பரிசை, பாகிஸ்தானின் மலாலாவுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

டில்லியில் வசித்து வரும் 60 வயதான கைலாஷ் சத்யார்த்தி, 1990 முதல் குழந்தை தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது சேவையின் மூலம் இதுவரை 80 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

பச்பன் பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பை துவக்கி கைலாஷ் சத்யார்த்தி நடத்தி வருகிறார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, பெண் கல்விக்காக போராடி வருபவர்.