Home உலகம் அதிபர் மாயம்: பெரும் உள்நாட்டுக் குழப்பத்தில் வட கொரியா!

அதிபர் மாயம்: பெரும் உள்நாட்டுக் குழப்பத்தில் வட கொரியா!

753
0
SHARE
Ad

BN-EY494_1010ki_G_20141010112742பியோங்யாங், அக்டோபர் 11 – வட கொரிய அதிபர், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாயமாகி உள்ளதால், அந்நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இவர் கடந்த 37 நாட்களாக எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்றும், யார் கண்களிலும் அவர் படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக, அங்கு பெரும் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வரும் தென் கொரியா, வட கொரிய அதிபர் தொடர்பாக தொடர்ந்து வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிபர் கிம் தொடர்பாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:-

“வட கொரிய அதிபர் கிம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஆளும் தொழிலாளர் கட்சியின் தொடக்க ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. மேலும், அவர் தொடர்ந்து மூன்று அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இதன் மூலம் அவர் உடல் நிலை மோசமடந்துள்ளதாகவே நினைக்கத் தோன்றுகிறது” என்று கூறியுள்ளன.

எனினும் கிம் நலமுடன் தான் இருக்கிறார் என வட கொரிய அரசு தொலைக்காட்சி நிறுவனம் செய்தி ஒளிபரப்பி வருகின்றது.