Home இந்தியா அக்டோபர் 17-ம் தேதி ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

அக்டோபர் 17-ம் தேதி ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

516
0
SHARE
Ad

jayalalithaபெங்களூர், அக்டோபர் 13 – சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் அக்டோபர் 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்க கடந்த 7-ம் தேதி, கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்ததை அடுத்து, கடந்த 9-ம் தேதி அவரது சார்பில் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், உடல்நிலை மற்றும் வயது அடிப்படையில் ஜாமின் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில், சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கிற்கு, எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை என்றும், தற்போது அந்தப் பதவியில் இல்லாததால், வழக்கிற்கு தம்மால் எவ்வித தடையும் ஏற்படாது எனவும் ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பிலும் ஜாமின் கேட்டு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.