Home நாடு இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் புதிய கிளை!

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் புதிய கிளை!

706
0
SHARE
Ad

Samy-Vellu-300x202சுங்கைப் பட்டாணி, அக்டோபர் 13 – இன்னும் இரண்டு வருடங்களில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழத்தின் புதிய கிளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சுங்கைப் பட்டாணி அருகே செமிலிங்க் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் இந்த பல்கலைக்கழகம் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வண்ணம் புதிய கிளையை தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலம் பெட்டாலிங் ஜெயாவில் இந்த புதிய கிளை அமைக்கப்படலாம் என அப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு தெரிவித்துள்ளார்.

பெட்டாலிங் ஜெயாவில் அந்நிறுவனத்திற்குச் சொந்தமான 5 மாடிக் கட்டிடம் மற்றும் அதன் அருகே உள்ள நிலம் ஆகியவற்றில் இன்னும் இரண்டு ஆண்டுகளில், மாணவர் விடுதி உட்பட பல்கலைக்கழகம் சகல வசதிகளுடன் அமைக்கப்படும் என்றும் சாமிவேலு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஏய்ம்ஸ்ட் பட்டமளிப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், இன்னும் இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1500 மாணவர்கள் இருந்த இப்பல்கலைக்கழகத்தில் தற்போது 3200 மாணவர்கள் உள்ளனர் என்றும், இந்த எண்ணிக்கையை 5000 வரை உயர்த்த தாங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் சாமிவேலு தெரிவித்துள்ளார்.