Home நாடு “சிரியாவில் உள்ள மலேசியர்கள் குறித்து அரசுக்கு தெரியும்” – உள்துறை துணையமைச்சர் தகவல்

“சிரியாவில் உள்ள மலேசியர்கள் குறித்து அரசுக்கு தெரியும்” – உள்துறை துணையமைச்சர் தகவல்

612
0
SHARE
Ad

Wan Junaidiகோலாலம்பூர், அக்டோபர்  14 – சிரியாவில் உள்ள மலேசியர்களின் நிலை குறித்து அரசு நன்கு அறிந்திருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள மலேசியர்களில் சிலர் கொல்லப்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளதாக உள்துறை அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ வான் ஜுனைடி துங்கு ஜாஃபர் கூறியுள்ளார்.

“அவர்களுடன் (மலேசியர்கள்) நாங்கள் நேரடித் தொடர்பில் இல்லை. ஆனால் கைவசம் உள்ள விவரங்களின் அடிப்படையில் அவர்களைப் பற்றி அரசு நன்கு அறிந்துள்ளது. யார் (மலேசியர்கள்) அங்கு உள்ளனர், அவர்களில் யார் கொல்லப்பட்டனர் எனப் பல விவரங்கள் தெரியும். எனினும் பாதிக்கப்பட்டுள்ள பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதி செய்யாததால், மலேசிய அரசும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை,” என்று நாடாளுமன்ற வளாகத்தில் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ வான் ஜுனைடி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னதாக இஸ்லாமிய அனைத்துலக பல்கலைக் கழகக் கல்லூரியைச் (Kolej Universiti Islam Antarabangsa student – KUIS) சேர்ந்த சியாமிமி ஃபைக்கா என்ற மாணவி கடந்த 4ஆம் தேதி சிரியா புறப்பட்டுச் சென்றதை காவல்துறை உறுதி செய்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவில் இணைவதற்காகவே அவர் சிரியா சென்றுள்ளார் என்றும் முகநூல் வழி அறிமுகமான அகெல் சைனல் என்ற மற்றொரு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியை திருமணம் செய்ய அவர் விரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சன்னி பிரிவைச் சேர்ந்த ஒரு பெண், ஜிகாத் போராளியை மணந்து, அவரது பாலியல் விருப்பங்களை ‘ஜிகாத் அல் நிக்காஹ்’ என்ற நடைமுறையின்படி சட்டப்பூர்வமாக நிறைவேற்ற வேண்டும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த வான் ஜுனைடி, “இது உண்மை எனில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இஸ்லாத்தின் பாதையில் போராடவில்லை. ஏனெனில் எந்த மதமும் பெண்கள் குறித்து இவ்வாறு போதிக்கவில்லை,” என்றார்.