Home நாடு இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானார் டத்தோ கீதாஞ்சலி ஜி!

இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானார் டத்தோ கீதாஞ்சலி ஜி!

1198
0
SHARE
Ad

Geethaகோலாலம்பூர், அக்டோபர் 14 – மைஃபே அமைப்பின் தலைவர் பொறுப்பு, கலை விழாக்கள், அரசியல் கூட்டங்கள், டத்தோ பட்டம், தனது தனிப்பட்ட திருமண வாழ்க்கை குறித்த சர்ச்சைகள் என கடந்த சில ஆண்டுகளாக சூறாவளியாக சுற்றிக் கொண்டிருந்தவர் அஸ்ட்ரோ விழுதுகள் புகழ் டத்தோ கீதாஞ்சலி ஜி.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென தனது வேகத்தைக் குறைத்துக் கொண்ட அவர், விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார்.

“எங்கே போனார் கீதாஞ்சலி ஜி?” என்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவிற்கு, தனது பேஸ்புக் இடுகைகளைக் கூட குறைத்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படமும், இடுகையும் நிச்சயம் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தனக்கு கடந்த செப்டம்பர் 14-ம் தேதி, அழகிய, ஆரோக்கியமான இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தனது அன்பான கணவர் டத்தோஸ்ரீ ஜி.ஞானராஜா இந்த இரட்டை ஆண் குழந்தைகளின் வருகையால் மிகவும் மகிழ்ச்சியில் திளைப்பதாகவும், தான் ஒரு தாய் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமையடைவதாகவும் கீதாஞ்சலி ஜி குறிப்பிட்டுள்ளார்.

தனியுரிமை (Privacy) கருதி தனது குழந்தைகளின் மீது ஊடக வெளிச்சம் படுவதையும், அவர்களின் புகைப்படங்களை வெளியிடுவதையும் தான் விரும்பவில்லை என்றும், விரைவில் அனைவரையும் மீண்டும் சந்திப்பதாகவும் கீதாஞ்சலி ஜி தெரிவித்துள்ளார்.