ஈப்போ, அக்டோபர் 15 – பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் சாம்ப்ரி அப்துல் காதிரின் தந்தை நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார். புலாவ் பங்கோரில் உள்ள தேசா பங்கோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாம்ப்ரியின் தந்தை அப்துல் காதிர் முகமட் (73 வயது) செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.10 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
புலாவ் பங்கோரில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்று பிரார்த்தனைகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
‘பாக் கரிம்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அப்துல் காதிர் முகமட்டுக்கு (படம்) சாம்ப்ரி உட்பட மொத்தம் ஏழு பிள்ளைகள் உள்ளனர்.
23 ஆண்டுகள் தெலுக் ராஜா பாயாங் கிராமத்தின் தலைவராகப் பணியாற்றி, கடந்த ஆண்டு தான் ஓய்வு பெற்றார் அப்துல் காதிர் முகமட்.
–