Home உலகம் ஆஸ்திரேலியாவில் முதலீடுகளை ஊக்குவிக்க புதிய விசா கொள்கை!

ஆஸ்திரேலியாவில் முதலீடுகளை ஊக்குவிக்க புதிய விசா கொள்கை!

475
0
SHARE
Ad

AUSTRALIAகேன்பெர்ரா, அக்டோபர் 15 – ஆஸ்திரேலியாவில் நடைமுறைக்கு வர இருக்கும் புதிய விசா கொள்கையால், செல்வந்தர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நிரந்தரமாகத் தங்கும் உரிமையைப் பெற இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் முதல் புதிய விசா கொள்கையை கடைபிடிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அந்த புதிய விசா கொள்கையின் படி 15 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக முதலீடு செய்பவர்கள், ஒரு வருடத்திற்குப் பின்னர் நிரந்திர தங்கும் உரிமையைப் பெறலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே அந்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கை நான்காண்டு காலத்தில் ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்பவர்களுக்கு நாட்டில் வசிக்கும் உரிமை தரும் ஒரு திட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

2015-ம் ஆண்டு உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் எதிர்மறை மாற்றங்கள் நிகழ இருக்கின்றன என அனைத்துலக நிதி வாரியம் (IMF) கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தது.

இந்த மாற்றங்களில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை காத்துக் கொள்ள உலக நாடுகள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா முதலீட்டாளர்களுக்கு இந்த புதிய விசா வரம்பை அறிவித்து இருப்பது, வர இருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களுக்கான விசா திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் அந்நாட்டில் வெற்றிகரமாகக் குடியேறிவர்களில் 90 சதவீதம் பேர் சீனர்கள் ஆவர்.

ஆஸ்திரேலியாவில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்து இருப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.