Home இந்தியா காஷ்மீர் எல்லையில் தொடர் தாக்குதல்: 28,000 கிராம மக்கள் வெளியேற்றம்!

காஷ்மீர் எல்லையில் தொடர் தாக்குதல்: 28,000 கிராம மக்கள் வெளியேற்றம்!

503
0
SHARE
Ad

Jammu Kashmir location mapகாஷ்மீர், அக்டோபர் 16 – காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், ஜம்மு-காஷ்மீரின் எல்லையோரத்தில் வசித்து வந்த 28,000 கிராம மக்கள் தாற்காலிக நிவாரண முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்திய, பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் தொலைபேசி வழியாக செவ்வாய்க்கிழமை இது தொடர்பாக முதல்கட்ட ஆலோசனைகளை  நடத்தியுள்ளனர்.

அப்போது, இந்திய அதிகாரிகள் கடந்த இரண்டு வார காலமாக, பாகிஸ்தான் படையினரின் கடுமையான தாக்குதல்களை எதிர்த்துப் போராடி வருவதாகவும் இது இரு நாடுகளின் உறவிற்கு ஏற்புடையதல்ல என்று வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

எனினும் இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பு அதிகாரிகள் கூறுகையில், “இந்திய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் போது காஷ்மீர் எல்லையோரப் பகுதியில் காரணமின்றி இந்திய இராணுவம் நடத்தி வரும் தாக்குதல் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது” என்று தெரிவித்துள்ளனர்.

இரு நாட்டு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் முடிவில், எல்லைப் பகுதியில் சிறிது நேரம் அமைதி நீடித்தது.

எனினும், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் நேற்றுமுன்தினம் மீண்டும் இரு முறை தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.