Home உலகம் எல்லையில் தாக்குதல்களை நிறுத்த இந்தியா-பாகிஸ்தானுக்கு சீனா அறிவுறுத்தல்!

எல்லையில் தாக்குதல்களை நிறுத்த இந்தியா-பாகிஸ்தானுக்கு சீனா அறிவுறுத்தல்!

436
0
SHARE
Ad

Pakistan_Border_1212219cபெய்ஜிங், அக்டோபர் 17 – காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என சீனா அறிவுறுத்தி உள்ளது.

காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில், கடந்த 1-ம் தேதி முதல் இரு நாடுகளின் இராணுவமும் ஒன்றை ஒன்று தாக்கி வருகின்றன. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஹாக்கி பிரிவில், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது.

அன்று முதல் பாகிஸ்தான் இராணுவம், இந்திய எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு இந்தியா தக்க பதிலடி தந்து வருகிறது என இந்திய தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது. இதன் காரணமாக எல்லையில் கடும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த நிலையில்  இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹாங் லீ கூறியதாவது:-

“இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் நடந்து வரும் தாக்குதல்களை சீனா மிகவும் உன்னிப்புடன் கவனித்து வருகின்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாட்டினர் என்பதோடு மட்டுமல்லாமல், சீனாவுடன் அவ்விரு நாடுகளும் நெருங்கிய நட்பு கொண்டிருக்கின்றன.”

“இதனைக் கருத்தில் கொண்டு கூறுகையில், இரு தரப்பும் சமாதானத்தைக் கடைப்பிடித்து கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். தொடர் தாக்குதல் அரங்கேறி வருவது நிறுத்தப்பட வேண்டும். பேச்சு வார்த்தையின் மூலம் நிரந்திர தீர்வு காண முடியும். தெற்காசியாவின் அமைதி, நிலைப்புத்தன்மையில் இரு நாடுகளும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. எனவே அதனை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.