Home வணிகம்/தொழில் நுட்பம் ப்ளிப்கார்ட் நடத்திய வர்த்தக சூது – வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி!

ப்ளிப்கார்ட் நடத்திய வர்த்தக சூது – வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி!

539
0
SHARE
Ad

thumb

புது டில்லி, அக்டோபர் 17 – இந்தியா அளவில், உலகின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் சரியாக காலூன்ற முடியாமல் தவித்து வருகின்றது.

அதற்கு முக்கிய காரணம், இந்திய இணைய வர்த்தகத்தில் பெயர் பெற்ற ப்ளிப்கார்ட் (Flipkart) நிறுவனமாகும்.

#TamilSchoolmychoice

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த நிறுவனம் என்ற நன்மதிப்பைப் பெற்ற ப்ளிப்கார்ட் நிறுவனம், வர்த்தக நோக்கத்துடன் சமீபத்தில் அறிவித்த ‘பிக் பில்லியன் டே’ (Big Billion Day) எனும் சிறப்பு விற்பனைத் தள்ளுபடி அறிவிப்பினால் வாடிக்கையாளர்களிடம் பெற்று இருந்த நன்மதிப்பினை இழந்துள்ளது.

ப்ளிப்கார்ட் நிறுவனம் கடந்த 6-ம் தேதி, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பிக் பில்லியன் டே என்னும் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்தது. இதன் மூலம் பொருட்களுக்கு 50 வீதம் வரை தள்ளுபடி விற்பனையை அறிவித்தது.

இதன் காரணமாக அந்த ஒரு நாளில், பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் ப்ளிப்கார்ட் இணைய தளத்தை அணுகியதால், இணைய வேகம் கடுமையாக முடங்கியது. இதனால் பயனர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர்.

மேலும், அதிக வாடிக்கையாளர்கள் விற்பனைக்காக இணையத்தை அணுகுவர் என்று அறிந்து இருந்தும் குறைந்த அளவு பொருட்களையே உள்ளிருப்பாக ப்ளிப்கார்ட் நிறுவனம் வைத்து இருந்தது. இதன் காரணமாக பெரும்பாலான தள்ளுபடி பொருட்கள் ‘தற்போது விற்பனையில் இல்லை’  என்ற வாசகமே இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டது.

ப்ளிப்கார்ட்டின் இலாப நோக்கம்:

இணைய வர்த்தகத்தை பொறுத்த வரை பயனர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையில் எந்தவொரு இடைத்தரகரும் வர முடியாது. இதன் காரணமாக இணைய வர்த்தக நிறுவனங்கள் பொருட்களை குறைந்த விலையில் கொடுக்கின்றன. இதனால் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பான்மையான மக்கள் இணைய வர்த்தகத்தை அணுகுகின்றனர்.

இதனை உணர்ந்த ப்ளிப்கார்ட் நிறுவனம்,   கடந்த 6-ம் தேதி ஒரு ரூபாய் முதல் பொருட்களை விற்பனை செய்தது.  எனினும் அந்த பொருள் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. அந்த ஒரு நாளில் மட்டும் வர்த்தக ரீதியாகவும், விளம்பர ரீதியாகவும் 100 மில்லியன் டாலர்கள் அளவிற்கு ப்ளிப்கார்ட் நிறுவனம் இலாபம் அடைந்துள்ளது.

மேலும், ப்ளிப்கார்ட் போன்ற இணைய வர்த்தக நிறுவனங்கள் வேலட் (Wallet) எனும் புதிய பணம் சேமிப்பு முறை அறிமுகப்படுத்தி உள்ளன.

இதன் மூலம், வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்திடம் தங்கள் பெயரில் ஒரு சேமிப்புக் கணக்கைத் துவங்கி பணத்தை சேமித்துக் கொள்ள முடியும். அதன் மூலம் தங்களுக்குத் தேவையான பொருட்களை அவர்கள் எளிதாக வாங்கிக் கொள்ளலாம். இதற்காக  அந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய பலனை கொடுக்கின்றனவா? என்றால் இல்லை என்பதே பதிலாகும். இதன் மூலம் சிறந்த பலனை அடைவது அந்நிறுவனங்கள் தான்.

ப்ளிப்கார்ட் நடத்திய இந்த வர்த்தக சூது, இணைய வர்த்தகம் பற்றி மக்கள் மத்தியில் ஒரு எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கின்றது என்பது பட்டவர்த்தனமான உண்மை.