Home வாழ் நலம் ரத்த புற்றுநோயை குணமாக்கும் வெண்டைக்காய்!

ரத்த புற்றுநோயை குணமாக்கும் வெண்டைக்காய்!

739
0
SHARE
Ad

Fresh Ocra (Ladies Fingers)அக்டோபர் 20 – வெண்டைக்காய் எந்தவிதமான நச்சுத் தன்மையையும்  பெற்றிருக்கவில்லை என்பதாலும் சுவை மிக்கது என்பதாலும் இளஞ்சிறார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் கூட பயன் உள்ளதாகும் வெண்டைக்காய்.

பல்வேறு உடல் குறைபாடுகளையும், உற்ற நோய்களையும் போக்கும் குணம் வெண்டைக்காய்க்கு உண்டு. மலச்சிக்கல், மனச் சிக்கல் ஆகியவற்றைப் போக்கும் குணம் உண்டு.

தோல் நோய்களையும், சர்க்கரை நோயையும், புற்றுநோய் நோயையும் குணப்படுத்த வல்லது. இது சிறுநீரைப் சுத்தப்படுத்துவதோடு அதன் துர்நாற்றத்தைப் போக்கக் கூடியது ஆகும்.

#TamilSchoolmychoice

வெண்டைக்காயைச் சமைத்து உண்பதாலும், பச்சையாக பயன்படுத்துவதாலும் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு தோல் மென்மையும் பளபளப்பும் பெறும். உலகப் பேரழகியாக விளங்கிய எகிப்து தேசத்தின் அரசி கிளியோ பாட்ரா”வின் அழகுக்கு வெண்டைக்காயைப் பயன்படுத்தியதும் மிக முக்கியமான காரணமாகச் சொல்லப் படுகிறது.

ladies fingerவெண்டைக்காயின் இளம் விதைகளைத் நீர் இட்டுக் குடிப்பதால் தோல் மென்மையும் பளபளப்பும் பெறும். மேற்பூச்சாக இதன் சாற்றை பூசுவதால் குளிர்ச்சியையும் அழகையும் தருவதோடு தோல் நோய்களையும் குணப்படுத்தும்.

முற்றிய விதைகளைத் காய்ச்சி பருகுவதால் கடுப்பைத் தருகின்ற வலி குணமாகும். வெண்டைக்காய் விதைகளினின்று எடுக்கப்பட்ட சத்து புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு அழிக்கவும் வல்லது.

வெண்டைக்காய் உணவோடு அன்றாடம் சேர்த்துக் கொள்வதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது என்றும், கண் பார்வை தெளிவு பெறுகிறது என்றும், உடல் எடை வற்றுகிறது என்றும்,

மலச் சிக்கலை முறிக்கிறது என்றும், ரத்த சோகையை போக்குகிறது என்றும் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது என்றும் நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

okra-gravyவெண்டைக்காயைத் தினம் உணவுடன் சேர்த்துக் கொள்வதால் உடலில் கொழுப்புசத்து சேராமல் காத்துக் கொள்ள இயலும். தினம் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை சுத்தம் செய்து,

200 மி.லி. தண்ணீர் கொண்ட ஒரு டம்ளரில் இரவு முழுவதும் ஊற வைத்திருந்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் தெளிவாக எடுத்துக் குடித்துவந்தால் சில மாதங்களில் ரத்த புற்றுநோய் குணமாகும் என்பது கண்கூடான அனுபவம். பல்லாயிரம் பேருக்கு சர்க்கரை நோயும், கட்டுக்குள் வந்தது தெரியவந்தது.