Home தொழில் நுட்பம் ஆப்பிளின் ஓஎஸ் எக்ஸ் யோஸ்மைட் இயங்குதளத்தின் சிறப்பு அம்சங்கள்!

ஆப்பிளின் ஓஎஸ் எக்ஸ் யோஸ்மைட் இயங்குதளத்தின் சிறப்பு அம்சங்கள்!

571
0
SHARE
Ad

osx_yosemite-finder-viewகோலாலம்பூர், அக்டோபர் 20 – ஆப்பிள் நிறுவனம் கடந்த 16-ம் தேதி ஐபேட் மற்றும் ரெட்டினா ஐபேட் மினி 3 போன்ற கருவிகளுடன், மேக் கணினிகளுக்கான ‘ஓஎஸ் எக்ஸ் யோஸ்மைட்’ (OS X Yosemite) என்ற இயங்குதளத்தையும் வெளியிட்டது.

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளியாகி உள்ள இந்த இயங்குதளம் மேக் கணினிகள் மீது பயனர்கள் மத்தியில் மீண்டும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாடு (WWDC2014)-ன் போது ஆப்பிள் நிறுவனம் ஓஎஸ் எக்ஸ் யோஸ்மைட்-ன் முதல் பதிவினை, பயனர்களுக்கான முன்னோட்டமாக வெளியிட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் கடந்த 16-ம் தேதி நடைபெற்ற புதிய கருவிகள் அறிமுக  விழாவின் போது ‘ஓஎஸ் எக்ஸ் 10.10 யோஸ்மைட்-ன் இறுதி பதிப்பு வெளியிடப்பட்டது.

os-x-yosemite-review-16இந்த புதிய இயங்குதளப் பதிப்பு பற்றி ஆப்பிள் நிறுவனம் கூறுகையில், “பயனர்கள் தங்கள் மேக் கணினிகளுக்கான புதிய இயங்குதளத்தை மேம்படுத்த வேண்டிய தருணம் இது. புதிய யோஸ்மைட் இயங்குதளம் பயனர்களுக்கு பரிச்சயமான ஒன்றாக இருக்கும்.

அதே தருணத்தில் இதன் நேர்த்தியான வடிவமைப்பு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும். இந்த புதிய இயங்குதளத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேக், ஐபோன் மற்றும் ஐபேட் உள்ளிட்ட அனைத்து கருவிகளும் ஒருங்கிணைந்து இயங்குவதற்கான புதிய வழி உருவாக்கப்பட்டுள்ளது” என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஐஒஎஸ்-ல் உள்ள பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த புதிய இயங்குதளத்திலும் உள்ளன. எனினும், ஆப்பிள் நிறுவனம் இந்த இரண்டு இயங்குதளங்களையும் தனித் தனியான ஒன்றாகவே கையாள்கின்றது. யோஸ்மைட் இயங்குதளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஏர்ட்ராப்’ (AirDrop) எனும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

OS-X-Yosemite-screensஇதன் மூலம், ஐஒஎஸ் கருவிகளில் கோப்புகள் பரிமாற்றம் என்பது எளிதாகின்றது மேலும், இதில் ஐபோன் மூலமாக வைஃபைக்கான உடனடி ஹாட் ஸ்பாட்டை உருவாக்குதல், தொலைபேசி அழைப்புகளை ஏற்கும் வசதி, குறுந்தகவல்களை அனுப்பும் வசதி, புகைப்படங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான பல்வேறு சிறந்த செயலிகள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

5.16ஜிபி சேமிப்பு அளவு கொண்ட இந்த இயங்குதளம், ஓஎஸ் எக்ஸ் 10.6.8 அல்லது அதற்கு முன் உள்ள பதிப்புகளுக்கு ஏற்றதாக இருக்கும். பயனர்கள் இந்த புதிய இயங்குதளத்தை மேக் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என ஆப்பிள் அறிவித்துள்ளது.