Home இந்தியா மோடி தீபாவளியை காஷ்மீரில் கொண்டாடுகின்றார்

மோடி தீபாவளியை காஷ்மீரில் கொண்டாடுகின்றார்

524
0
SHARE
Ad

Narendra Modi 300 x 500ஸ்ரீநகர், அக்டோபர் 22 – நாடே தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருக்க, இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது தீபாவளியை எங்கு எப்படி கொண்டாடப்போகிறார் எனக் கேள்வி எழுவது இயல்பு.

காஷ்மீரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தீபாவளியை கொண்டாடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை அங்கு செல்கிறார்.

ஒரு நாள் பயணமாக காஷ்மீர் செல்லும் அவர், ஆளுநர் மாளிகையில் பல்வேறு தரப்பு குழுக்களை சந்தித்துப் பேசுகிறார். மேலும் காஷ்மீர் மக்களுக்கு சிறப்புத் திட்டங்களையும் மோடி அறிவிப்பார் எனத் தெரிகிறது.

#TamilSchoolmychoice

இயற்கை சீற்றத்தால் நிலைகுலைந்துள்ள காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் அவரது பயணம் இருக்கும் என கூறப்படுகிறது. வெள்ள சேதம் குறித்து முழு விவரங்களை பிரதமரிடம் அளிப்பதற்காக மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் காஷ்மீரில் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மோடியின் வருகையை முன்னிட்டு,காஷ்மீர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.