Home நாடு மோடியுடன் பிரதமர் நஜிப் தொலைபேசி உரையாடல்! தீபாவளிக்கு வாழ்த்து!

மோடியுடன் பிரதமர் நஜிப் தொலைபேசி உரையாடல்! தீபாவளிக்கு வாழ்த்து!

621
0
SHARE
Ad

Najib Modi Comboபுத்ராஜெயா, அக்டோபர் 22 – நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மலேசியப் பிரதமர் நஜிப் தனிப்பட்ட முறையில் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலின் போது, அண்மையில் நடந்து முடிந்த இரு மாநில (மகாராஷ்டிரா, ஹரியானா) தேர்தல்களில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் நஜிப் தனது வாழ்த்துக்களை மோடியிடம் தெரிவித்தார்.

மேலும், அடுத்த ஆண்டு மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமரை கேட்டுக்கொண்ட நஜிப், மலேசியாவில் உள்ள இந்தியர்கள் நாளை (இன்று அக்டோபர் 22) தீபாவளி பண்டிகையை கொண்டாட இருப்பதாகக் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இதையடுத்து இந்தியப் பிரதமருக்கும் இந்திய மக்களுக்கும் பிரதமர் நஜிப் தமது தீபாவளி வாழ்த்துக்களை கூறினார்.

பதிலுக்கு மலேசிய விமானங்கள் எம்எச் 370 மற்றும் எம்எச் 17 ஆகியவற்றுக்கு நேர்ந்த பேரிடர்கள் தொடர்பில் தமது ஆழ்ந்த இரங்கலை மோடி நஜிப்பிடம் தெரிவித்துக் கொண்டார்.