Home கலை உலகம் ‘கத்தி’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.12.5 கோடியாம்!

‘கத்தி’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.12.5 கோடியாம்!

564
0
SHARE
Ad

kaththiசென்னை, அக்டோபர் 24 – கத்தி படத்தின் முதல்நாள் வசூல் ரூ. 12.5 கோடியாம். விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கத்தி படம் தீபாவளி அன்று வெளியானது.

படத்தை இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான லைக்கா நிறுவனம் தயாரித்ததால் அதை வெளியிட சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழ் அமைப்புகளின் எதிர்ப்புகளால் படத்திற்கு இலவசமாக ஏகப்பட்ட விளம்பரம் கிடைத்தது. இதற்கிடையே பிரச்சனைகள் தீர உதவி செய்த அம்மாவுக்கு விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.

#TamilSchoolmychoice

இத்தனை பரபரப்புக்கு மத்தியில் படம் வெளியானது. இந்நிலையில் படம் முதல் நாளில் மட்டும் ரூ. 12.5 கோடி வசூல் செய்துள்ளது என படக்குழு தெரிவித்தது.