கோலாலம்பூர், அக்டோபர் 24 – ‘வல்லினம்’ குழுவினரால் ஒவ்வொரு ஆண்டும் ‘கலை இலக்கிய விழா’ வெற்றிகரமாக நடத்தப்பட்டுவருகிறது.
அதன்படி இவ்வருடமும் ஆறாவது ஆண்டாக நூல் வெளியீடுகளோடு சேர்த்து இலக்கிய நிகழ்வுகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்த வல்லினம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக இந்த வருடம் ‘வல்லினம் விருதுகள்’ என்ற ஒரு அங்கம் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
விருது தொகையாக 5000 ரிங்கிட்டுடன், அ.ரெங்கசாமி அவர்களின் ஆவணப்படம் மற்றும் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் நூலான ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை’ என்ற நூல் வல்லினம் குழுவினரால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் இயக்குனர் லீலா மணிமேகலை கலந்து கொண்டு அவரது ஆவணப்படங்கள் குறித்த அறிமுகத்தை செய்வார் என்று வல்லினம் குழு அறிவித்துள்ளது.அத்துடன் லீலா மணிமேகலையுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு வரும் நவம்பர் 2-ம் தேதி, பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5 மணி வரை, தலைநகர் கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் (ம.இ.கா தலைமையகம் எதிர்புறம்) நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். மேல் விபரங்களுக்கு வல்லினம் ஆசிரியர் – ம.நவீன் (செல்பேசி எண் – 0163194522) -ஐ தொடர்பு கொள்ளவும்.
லீலா மணிமேகலையின் நேர்காணலை காண கீழ் காணும் இணையத்தள இணைப்புகளைப் பயன்படுத்தவும்.