Home படிக்க வேண்டும் 3 வர்த்தகம் செய்ய ஏற்ற நாடாக சிங்கப்பூர் தேர்வு – மலேசியாவிற்கு 18-வது இடம்! 

வர்த்தகம் செய்ய ஏற்ற நாடாக சிங்கப்பூர் தேர்வு – மலேசியாவிற்கு 18-வது இடம்! 

607
0
SHARE
Ad

Singapore city viewசிங்கப்பூர், அக்டோபர் 30 – உலக அளவில், வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற நாடாக சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலக வங்கி அறிவித்துள்ள இந்த பட்டியலில் மலேசியா கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் முன்னேறி உலக அளவில் 18-வது இடத்தில் உள்ளது.

உலக வங்கி ஆண்டு தோறும், உலக அளவில் வர்த்தகம் செய்வதற்கு எளிதான நாடுகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி வருகின்றது. பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ள வர்த்தக வரையறைகள், கட்டுமான அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் வரி விதிப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.

அந்த கணக்கெடுப்பின் படி சிங்கப்பூர் உலக அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், சிங்கப்பூர் அரசு தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து முன்னுரிமைகளையும் அளிப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலில் மலேசியா ஆசிய அளவில் 4-வது இடத்தையும், உலக அளவில் 18-வது இடத்தையும் பிடித்துள்ளது.

#TamilSchoolmychoice

மலேசியாவைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு சிறப்பாக செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது. பொது மற்றும் தனியார் வணிகத்தை எளிதாக்கும் பொருட்டு அரசு எடுத்து வந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்தப் பட்டியலில் நியூசிலாந்து, ஹாங்காங் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. அண்டை நாடுகளான இந்தியா மற்றும் சீனாவிற்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.