Home உலகம் வெள்ளை மாளிகையின் கணினி அமைப்பிற்குள் ஊடுருவ முயற்சி?

வெள்ளை மாளிகையின் கணினி அமைப்பிற்குள் ஊடுருவ முயற்சி?

649
0
SHARE
Ad

White House

வாஷிங்டன், அக்டோபர் 30 – வெள்ளை மாளிகையின் கணினி அமைப்பிற்குள் சிலர் ஊடுருவி அதைச் செயலிழக்க வைக்க முயற்சித்தது தெரியவந்துள்ளது.

கணினியை செயலிழக்க வைக்கும் ஊடுருவல்காரர்கள் உலகெங்கிலும் செயல்பட்டு வருகிறார்கள். முக்கிய கணினி அமைப்புகளுக்குள் மிக நுணுக்கமான, ரகசியமான முறையில் ஊடுருவி, ரகசியங்களைத் திருடுவதுடன், அக்கணினி அமைப்பையும் இவர்கள் செயலிழக்க வைப்பர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் வெள்ளை மாளிகை கணினி அமைப்பிற்குள்ளும் சிலர் ஊடுருவி இருப்பதாகத் தெரிகிறது.

“இதை நாங்கள் மிக முக்கிய பிரச்சினையாகக் கருதுகிறோம். இதுபோன்ற ஊடுருவல் குறித்து தெரியவந்தால், உடனடியாக அவற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்,” எனப் பெயர் வெளியிட விரும்பாத வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயல்படும் சிலரே இந்தக் கணினி ஊடுருவலில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது என வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் கணினி அமைப்புக்குள் ஊடுருவ தினந்தோறும் எண்ணற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய தருணங்களில் வெள்ளை மாளிகை கணினி அமைப்புக்குள் நுழைய அதிபர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வெள்ளை மாளிகை கணினி அமைப்பு பாதிக்கப்படவில்லை. எங்களது கணினி அமைப்பை தற்காத்துக் கொள்ளும் விதமாகவே சில ஊழியர்களின் கணினிப் பயன்பாடு தற்காலிகமாக தடுக்கப்படுகிறது,” என்று வெள்ளை மாளிகை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.