Home கலை உலகம் ரூ.100 கோடியை நோக்கிச் செல்லும் கத்தி வசூல்!

ரூ.100 கோடியை நோக்கிச் செல்லும் கத்தி வசூல்!

577
0
SHARE
Ad

vijay-fights-the-people-kaththiசென்னை, அக்டோபர் 31 – ‘கத்தி’ படம் முதல் வாரத்தில் ரூ 82 கோடியை வசூலித்துள்ளதாகவும், விரைவில் ரூ 100 கோடியைத் தொடும் என்றும் சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளியையொட்டி கடந்த 22-ம் தேதி வெளியானது கத்தி படம். இந்தப் டம் முதல் நாள் மட்டுமே ரூ 25 கோடியை வசூலித்ததாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருந்தார்.

அடுத்தடுத்த நாட்களில் கத்தியின் வசூல் சிறப்பாக இருந்ததாகவும், இதனால் படம் வெளியான முதல் வாரம் மட்டும் ரூ 82 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த வசூல் தொடர்ந்தால் அடுத்த சில தினங்களில் ரூ 100 கோடியை எட்டிவிடும் என்று ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.