Home உலகம் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையான தீர்வினைக்காண முயற்சிக்கின்றது – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையான தீர்வினைக்காண முயற்சிக்கின்றது – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

525
0
SHARE
Ad

india.kashmir.delhi.lgஇஸ்லாமாபாத், அக்டோபர் 31 – காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையான தீர்வினைக்காண  முயற்சித்து வருகின்றது. எனினும், அதற்கு பாகிஸ்தான் எந்தவகையிலும் அனுமதி அளிக்காது என்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு, வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா தன்னிச்சையான தீர்வினைக்காண முயற்சி செய்து வருகின்றது. எனினும், இந்தியாவின் இந்த முயற்சியை பாகிஸ்தான் வெற்றியடையச் செய்ய விடமாட்டாது.”

“பாகிஸ்தான் அமைதியையே விரும்புகின்றது. ஆனால் அதனை எங்கள் நாட்டின் பலவீனம் என தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது.”

#TamilSchoolmychoice

“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில், இந்தியப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புகள் மற்றும் மனித உரிமை மீறல்களை எங்கள் நாட்டின் தூதர்கள் மூலம் பல்வேறு நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.”

“காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா.சபை கொண்டுவந்த தீர்மானங்கள் பொருத்தமானதாகவே உள்ளன. அந்தத் தீர்மானங்களுக்கு இருதரப்பு ஒப்பந்தங்கள் மாற்றாக முடியாது.”

“காஷ்மீர் பிரச்னையில் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, உலக நாடுகளின் கவனத்தினை கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.