Home கலை உலகம் ரூ.100 கோடி சொத்தை அபகரிக்க முயற்சிக்கிறார் என் அண்ணன் – நடிகர் கார்த்திக் பரபரப்பு புகார்

ரூ.100 கோடி சொத்தை அபகரிக்க முயற்சிக்கிறார் என் அண்ணன் – நடிகர் கார்த்திக் பரபரப்பு புகார்

565
0
SHARE
Ad

22-karthik21-300 (1)சென்னை, நவம்பர் 2 – நூறு கோடி ரூபாய் சொத்து தொடர்பில் நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மூத்த சகோதரர் இடையே மோதல் வெடித்துள்ளது. இதையடுத்து சுமூகத் தீர்வு காண முன்வராவிட்டால் அச்சொத்து தொடர்பில் வழக்கு தொடரப்போவதாக கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆங்கிலம் தெரியாத தனது தாயாரை ஏமாற்றி சொத்துக்கள் தொடர்பாக தனது சகோதரர் கணேஷ் உயில் எழுதி வாங்கியிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

“எனது 20 வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறேன். அப்போது முதல் எனது வருமானத்தை வீட்டில் தான் கொடுத்து வருகிறேன். எனது தந்தை இறந்த பிறகு அண்ணன் கணேஷ் தான் குடும்ப பொறுப்புகளை கவனித்து வந்தார். அவர் வருமானம் ஈட்டியதில்லை. எந்த வேலைக்கும் செல்லவில்லை. எனது திருமணத்திற்குப் பின் பிரச்சினை வந்ததால் வீட்டிற்கு பணம் தருவதை நிறுத்தினேன். கடந்த 6 ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் பொருளாதார ரீதியில் சிரமப்படுகிறேன்,” என்று கார்த்திக் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நிலத்தை தனது தாயாரை ஏமாற்றி கணேஷ் தன் பெயருக்கு உயில் எழுதி வாங்கிக் கொண்டதாக குற்றம் சாட்டிய கார்த்திக், போயஸ் தோட்டம் பகுதியில் உள்ள சொத்தையும் அவர் அபகரிக்க முயல்வதாக தெரிவித்துள்ளார்.

“ஆழ்வார்பேட்டை நிலத்தை அண்ணனே வைத்துக் கொள்ளட்டும். ஆனால் போயஸ் தோட்டத்தில் உள்ள பழைய வீட்டை இடித்துவிட்டு அங்கு எனது இரு சகோதரிகளுக்கும் அண்ணனுக்கும் சேர்த்து அடுக்குமாடி குடியிருப்பு கட்ட விரும்புகிறேன். இதற்கு அனுமதி மறுக்கும் அண்ணன், ரூ.100 கோடி மதிப்புள்ள அந்தச் சொத்தையும் கைப்பற்ற முயற்சிக்கிறார்,” என்று கார்த்திக் தெரிவித்தார்.

சொத்துப் பிரச்சினை தொடர்பாக இரு தினங்களில் தனது சகோதரர் சுமூக முடிவு காண முன்வராவிட்டால் சட்டப்பூர்வமாக வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் கூறினார்.