Home நாடு பேராக்கில் திடீர் வெள்ளப்பெருக்கு:6 கிராமங்களின் 30 பேர் வெளியேற்றம்

பேராக்கில் திடீர் வெள்ளப்பெருக்கு:6 கிராமங்களின் 30 பேர் வெளியேற்றம்

625
0
SHARE
Ad

Flood imageதைப்பிங், நவம்பர் 3-பேராக்கில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக 6 கிராமங்களைச் சேர்ந்த 30 பேர் அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். லங்காப்பில் உள்ள கம்போங் ஆயர் அடாடுரி, பாகான் செராயைச் சேர்ந்த கம்போங் பாரிட் சிம்பாங் 4, கம்போங் பாரிட் சிம்பாங் 5, பாரிட் லெபாய் கடிர், மாடாங் பாசிர் மற்றும் கம்போங் லோபாக் ஆகிய 6 கிராமங்களிலும் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் முழங்கால் வரை உயர்ந்திருந்த நிலையில், 3 மூத்த குடிமகன்கள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

“அனைவரும் தற்போது சுராவ் கிராமத்தில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,”  என்று குறிப்பிட்ட அவர் வெள்ளத்தால் 10 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

பாகான் செராயில் 9 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டு அலோர் பொங்சுவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 7 ஆண்கள், 8 பெண்கள், 3 சிறுவர்கள் மற்றும் 8 சிறுமிகள் அடங்குவர் என்றும் பாகான் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நூர் அஸ்மி கசாலி தெரிவித்தார்.