Home இந்தியா திமுகவுடன் கூட்டணி குறித்த எண்ணம் கிடையாது – வைகோ திட்டவட்டம்

திமுகவுடன் கூட்டணி குறித்த எண்ணம் கிடையாது – வைகோ திட்டவட்டம்

539
0
SHARE
Ad

vaikoசென்னை, நவம்பர் 3 – தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.  ம.தி.மு.க. நிர்வாகி கணேசமுர்த்தியின் இல்லத் திருமண விழா காங்கேயத்தில் நேற்று (2ம் தேதி) நடந்தது.

இதில் கலந்து கொண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது. தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும்கூட எனக்கு இல்லை.

“தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்போம் என்று ஒருபோதும் நான் கூறியது கிடையாது. கூட்டணி தொடர்பாக ஊடகங்களில்தான் செய்தி வெளியானது. மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு அரசியல் நாகரீகத்திற்கானது” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

 

 

 

Comments