Home தொழில் நுட்பம் கேள்விகளுக்கு மார்க் சக்கர்பெர்க் தயார் – நவம்பர் 6-ல் பொது மக்களுடன் பேஸ்புக்கில் கலந்துரையாடல்! 

கேள்விகளுக்கு மார்க் சக்கர்பெர்க் தயார் – நவம்பர் 6-ல் பொது மக்களுடன் பேஸ்புக்கில் கலந்துரையாடல்! 

515
0
SHARE
Ad

mark-zuckerbergநியூயார்க், நவம்பர் 4 – பொழுது போக்காக ஏற்படுத்திய செயலி ஒன்று, இன்று மக்களின் முழு பொழுதுகளையும் போக்கிக் கொண்டிருக்கின்றதே? ‘பேஸ்புக் மெசெஞ்சர்’ (Facebook Messenger) செயலியை நீங்கள் பயனர்களிடம் கட்டாயமாக்கப்பட வேண்டிய காரணம் என்ன? இவ்வாறான பல கேள்விகள் நமக்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கிடம் சந்தர்ப்பம் அமைந்தால் கேட்கத் தோன்றும். தற்போது அதற்கான சந்தர்ப்பம் அமையவிருக்கின்றது.

எதிர்வரும் 6-ம் தேதி, மார்க் சக்கர்பெர்க் பொது மக்களுடன் பேஸ்புக் வாயிலாக நேரடியாக கலந்துரையாட இருக்கிறார். சுமார் ஒரு மணி நேரம் நடக்கவிருக்கும் இந்த நேரடி கலந்துரையாடலில் மார்க் பொது மக்களின் அனைத்துவிதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்க இருக்கிறார்.

‘க்யூ அண்ட் ஏ வித் மார்க்’ (Q & A With Mark) என்ற பேஸ்புக் பக்கத்தில் தான் இந்த கலந்துரையாடல் நடைபெற இருக்கின்றது.

#TamilSchoolmychoice

மேலும், பயனர்கள் தங்களுக்கான கேள்விகளை மேலே குறிப்பிட்ட பக்கத்தில் பதிவு செய்யலாம். ஏற்கனவே கேட்கப்பட்டு இருக்கும் கேள்வி தங்களுக்கு பிடித்து இருந்தால் அதனை ‘லைக்’ (Like) செய்யலாம். அதிக லைக்கள் பெரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும்.

பேஸ்புக் நிறுவன பணியாளர்களுடன் நல்ல இணக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இது போன்ற கேள்வி பதில் நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுவது வாடிக்கை. தற்போது முதன்முறையாக பயனர்களுடன் மார்க் இது போன்ற நிகழ்வில் பங்கு பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.