Home வாழ் நலம் மது பழக்கத்தை மறக்கடிக்கும் கொய்யாப்பழம்!

மது பழக்கத்தை மறக்கடிக்கும் கொய்யாப்பழம்!

773
0
SHARE
Ad

guava5நவம்பர் 4 – விலை மலிவான பழங்களுள் ஒன்று தான் கொய்யாப்பழம். இந்த கொய்யாப்பழமானது பல்வேறு நன்மைகள் உள்ளடக்கியுள்ளது. அதிலும் நான்கு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரே ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும்.

ஆம், ஒரே ஒரு கொய்யாப்பழத்தில் உடலுக்கு வேண்டிய பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

koiyaநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

#TamilSchoolmychoice

கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி வளமாக நிறைந்துள்ளதால், இதனை தினமும் உட்கொண்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, எவ்வித நோய் தாக்கமும் ஏற்படாதவாறு தடுக்கலாம்.

மலச்சிக்கலைப் போக்கும்:

மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், கொய்யாப்பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.

மது பழக்கத்தை மறக்கடிக்கும்:

மது போதைக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால், கொய்யாப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். இதனால் மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

guava-leaf-1024x782புற்றுநோயை தடுக்கும்:

கொய்யாப்பழத்தில் லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ளன. இவை புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும் குணம் கொண்டவை.

முதுமையைத் தடுக்கும்:

கொய்யாப்பழத்தின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. எனவே இதன் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. இப்படி தோல் நீக்காமல் சாப்பிட்டால், அவை முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருவதோடு, தோல் வறட்சியை நீக்கும். அதுமட்டுமின்றி முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராகவும் மாற்றும்.