Home நாடு 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு பிரதமர் துவங்கி வைப்பார் – உத்தாமா சாமிவேலு

9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு பிரதமர் துவங்கி வைப்பார் – உத்தாமா சாமிவேலு

716
0
SHARE
Ad

samyvellu

கோலாலம்பூர், நவம்பர் 4 – எல்லா மொழிகளுக்கும் முதன்மை மொழியாக திகழும் தமிழ் மொழிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மூன்றாவது முறையாக மலேசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இம்மாநாட்டை டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார் என இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசிய கட்டமைப்பு துறையின் சிறப்பு தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அண்மையில் மஇகா தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் பொருட்டு 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 29 ஜனவரி முதல் 1 பிப்ரவரி 2015 வரையில் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியர்கள் மத்தியில் மொழி மீதுள்ள பற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இனியும் நம் மொழியை நாம் விட்டுவிடக் கூடாது என்ற சிந்தனை ஒவ்வோர் இந்தியர் மத்தியிலும் தோன்ற வேண்டும்.

நமது நாட்டில் இன்னும் 523 தமிழ்ப் பள்ளிகள் உள்ளதால்தான் நமது எதிர்கால சந்ததியினருக்கு தமிழ் மொழியை கற்றுக்கொள்ள உதவியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நம் மொழி இன்னும் பாதுகாக்கப்பட்டுதான் வருகிறது. அந்த மொழி கற்றுக்கொடுக்கும் பற்று, பாசம், அன்பு அனைத்தும் இதுநாள் வரை இந்தியர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது என்றார்.

இம்மாநாட்டை பற்றிய மேல் விவரங்களுக்கு:

அகப்பக்கம்: 9icsts2014.um.edu.my

மின்னஞ்சல்: 9icsts@gmail.com

தொலைபேசி: 03-79675968

தொலைநகலி: 03-79675967