Home இந்தியா தி.மு.க. – அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை – ராமதாஸ் அறிவிப்பு!

தி.மு.க. – அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை – ராமதாஸ் அறிவிப்பு!

579
0
SHARE
Ad

ramadosssசேலம், நவம்பர் 4 – பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் நேற்று சேலம் மாவட்ட பா.ம.க. செயல்வீரர்கள்– இளைஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

“பால் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மின்சார கட்டணத்தை உயர்த்தினாலும் பாதிக்கப்படுவது ஏழை–எளிய மக்கள் தான். இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத் தக்கது.”

“இலங்கை அரசு உடனடியாக தண்டனையை ரத்து செய்ய வேண்டும். பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் ஆகியவற்றை கண்டித்து 5–ந் தேதி சென்னையில் பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்”.

#TamilSchoolmychoice

“2016–ம் ஆண்டு தேர்தலில் புதிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை தவிர்த்து பா.ம.க. தலைமையை ஏற்று வரும் கட்சிகளை ஒன்று சேர்த்து தேர்தலில் போட்டியிட இருக்கிறோம் என ராமதாஸ் கூறினார்.