Home அவசியம் படிக்க வேண்டியவை 9/11 தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் புதுப்பொலிவுடன் உலக வர்த்தக மையக் கட்டிடம்!

9/11 தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் புதுப்பொலிவுடன் உலக வர்த்தக மையக் கட்டிடம்!

565
0
SHARE
Ad

wtc

நியூயார்க், நவம்பர் 4 – கடந்த 2001-ம் ஆண்டு, செப்டம்பர் 9-ம் தேதி,அமெரிக்காவிலுள்ள உலக வர்த்தக மையம் அல்கொய்தா தீவிரவாதிகளால் விமான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு தரைமட்டமானது.

அதனை சீரமைக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று புதிதாக கட்டப்பட்டுள்ள உலக வர்த்தக மையம் செயல்பாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க 8 ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும், 1776 அடிஉயரம் கொண்ட இந்த கட்டிடம் முழு பாதுகாப்புடன் செயல்படக்கூடய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிக சிறந்த பாதுகாப்பை வழங்கும் அலுவலகங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு நடந்த 9/11 தாக்குதலில் 2700-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.தற்போது உலக வர்த்தக மையத்திற்குள் நுழைந்திருக்கும் நிறுவனமான கோன்டே நாஸ்ட் நிர்வாகிகள் ”இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். தாக்குதலுக்கு பிறகு மீண்டும் இங்கு வேலை செய்வது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், தற்போது ஐந்து அடுக்குகளில் 3500 பேர் வேலையை துவங்குவதாகவும், 2015-க்குள் மேலும் 3000 பேர் இங்கு இணைவார்கள் என்றும் கூறியுள்ளனர். இது போன்று மற்ற நிறுவனங்களின் வருகையும் துவங்கியுள்ளது.

இந்த கட்டிடம் திரும்ப திறக்கப்பட்டதை அங்கு வேலை பார்த்த, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உணர்ச்சிபூர்வமான பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.