Home கலை உலகம் சிவகார்த்திகேயனுக்காக பட தலைப்பை விட்டுக் கொடுத்த கமல்ஹாசன்!

சிவகார்த்திகேயனுக்காக பட தலைப்பை விட்டுக் கொடுத்த கமல்ஹாசன்!

734
0
SHARE
Ad

siva karthikayanசென்னை, நவம்பர் 4 – சிவகார்த்திகேயனுக்காக தனது படத்தின் தலைப்பை விட்டுகொடுத்துள்ளார் கமல்ஹாசன். சத்யா மூவீஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்து வெற்றியான படம் ‘காக்கிச் சட்டை’.

இதில் கமல்ஹாசன் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ஒரு படத்திற்கு இந்த தலைப்பு வைத்தால் நன்றாக இருக்கும் என படக்குழுவினர் எண்ணினர். இதுகுறித்து சத்யா மூவீசை அணுகி கேட்டபோது அவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டனர்.

இதேபோல கமல்ஹாசனிடம் ‘காக்கிச் சட்டை’ படத் தலைப்பை எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டபோது அவரும் பெருந்தன்மையாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். இதை சிவகார்த்திகேயனும் உறுதி செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

“காக்கி சட்டைதான் எனது அடுத்த படத்தின் பெயர். இதற்காக கமல்சார் மற்றும் சத்யா மூவீசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இப்படத்தின் இசை நவம்பரில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சிவகார்த்திகேயன் படத்துக்கு தானா என்று பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.