Home இந்தியா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜப்பானின் தேசிய விருது!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜப்பானின் தேசிய விருது!

544
0
SHARE
Ad

manmohan-singhபுதுடெல்லி, நவம்பர் 4 – சிறப்பாக பணியாற்றிய அரசு உயர் அதிகாரிகள், முன்னாள் பிரதமர்கள், தூதர்கள், நீதிபதிகள் ஆகியோருக்கு நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘பாலோனியா மலர்கள்’ விருதை ஜப்பான் வழங்கி வருகிறது.

தற்போது 57 வெளிநாட்டு பிரமுகர்களுக்கு இந்த விருதை ஜப்பான் அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இடம் பெற்றுள்ளார். இது குறித்து டெல்லியில் உள்ள ஜப்பானிய தூதரகம் விடுத்துள்ள செய்தியில்,

‘‘இந்தியா-ஜப்பான் இடையே 35 ஆண்டுகளாக நீடிக்கும் உறவை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ‘பாலோனியா மலர்கள்’ விருது வழங்கப்படவுள்ளது”.

#TamilSchoolmychoice

“இது ஜப்பானின் மிக உயர்ந்த விருதாகவும், சிறந்த சேவையாற்றிவர்களுக்கு வழங்கப்படும் மிக அரிய விருதாகவும் உள்ளது. இதனைப் பெரும் முதல் இந்தியர் மன்மோகன் சிங்’’ என தெரிவித்துள்ளது.

இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து மன்மோகன் சிங் விடுத்துள்ள அறிக்கையில்’ “பாலோனியா மலர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதை பெருமையாக உணர்கிறேன். ஜப்பான் மக்கள், அரசின் அன்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.”

“இந்தியா-ஜப்பான் உறவு மேம்பட்டு செழிப்பும் ஏற்பட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இதை குறிக்கோளாக வைத்து எனது பிரதமர் பதவி காலத்தில் மட்டும் அல்ல, அரசுப் பணியில் இருக்கும்போது பணியாற்றினேன்”.

“ஆசியாவை முன்னேற்றுவதில்  இந்தியா, ஜப்பான் ஆகியவை கவனம் செலுத்தின. அதனால் கடந்த 10 ஆண்டுகளில் இருதரப்பு உறவு வலுவடைந்தன’’ என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.’