Home இந்தியா மன்மோகன் சிங்கிற்கு ஜப்பான் விருது : பிரணாப் முகர்ஜி, மோடி வாழ்த்து!

மன்மோகன் சிங்கிற்கு ஜப்பான் விருது : பிரணாப் முகர்ஜி, மோடி வாழ்த்து!

492
0
SHARE
Ad

modiபுதுடெல்லி, நவம்பர் 6 – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஜப்பானின் மிக உயர்ந்த தேசிய விருது, டோக்கியோவில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.

சிறப்பாக பணியாற்றிய அரசு உயர் அதிகாரிகள், முன்னாள் பிரதமர்கள், தூதர்கள், நீதிபதிகள் ஆகியோருக்கு நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘பாலோனியா மலர்கள்‘ விருதை ஜப்பான் வழங்கி வருகிறது.

தற்போது 57 வெளிநாட்டு பிரமுகர்களுக்கு இந்த விருதை ஜப்பான் வழங்கியுள்ளது. 82 வயதான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேற்று டோக்கியோவில் நடந்த விழாவில் இந்த விருதை பெற்றார்.

#TamilSchoolmychoice

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இந்திய – ஜப்பான் இடையிலான உறவில் முன்னேற்றம் காண மன்மோகன் சிங் சிறந்த சேவை ஆற்றியுள்ளார்.”

“அவரது சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதை ஜப்பான் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த உயர்ந்த விருதை பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் மன்மோகன் சிங் பெற்றுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தியில், “இது மிகுந்த மகிழ்ச்சியையும், கௌரவத்தையும் அளித்துள்ளது. அவருடைய சேவைக்கு கிடைத்த அங்கீகாரம். இதற்காக மன்மோகன் சிங்கிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் மோடி.