Home நாடு விவேகானந்தா ஆசிரமம் நமது நாட்டின் சொத்து – நாடாளுமன்றத்தில் குலசேகரன் வலியுறுத்தல்!

விவேகானந்தா ஆசிரமம் நமது நாட்டின் சொத்து – நாடாளுமன்றத்தில் குலசேகரன் வலியுறுத்தல்!

615
0
SHARE
Ad

Vivekananda_Ashramகோலாலம்பூர், நவம்பர் 6 – நாடு முழுமையிலும் இந்திய சமுதாயத்தினரிடையே பலத்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் தலைநகர் பிரிக்பீல்ட்சில் உள்ள விவேகானந்தா ஆசிரம விவகாரம் பற்றி கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஈப்போ பாராட் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரனும், புக்கிட் பிந்தாங் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் பொங் குய் லானும் இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பினர்.

விவேகானந்தா ஆசிரமம் விலை மதிப்பற்ற நாட்டின் சொத்து எனவும், அது அமைந்திருக்கும் நிலப்பகுதி உடனே பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய பகுதியாக பிரகடனம் செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

#TamilSchoolmychoice

விவேகானந்தா ஆசிரமம், சுற்றுலா மையமாகும் என்று காலாச்சார, சுற்றுலா துறை அமைச்சர் டத்தோ நஸ்ரி கூறியிருப்பதாக குலசேகரன் சென்னார். இந்த மையம் பாரம்பரிய பகுதியாக பாதுகாக்கப்பட வேண்டும். அதை நாமே அழித்துவிடக் கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டதாக அவர் கூறினார்.

விவேகானந்தா ஆசிரமத்தை பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய பகுதியாகவும், அடையாள சின்னமாகவும் அங்கீகரிக்க கலாச்சார துறை முயற்சி செய்திருக்கிறது. ஆனால் அந்த நில உரிமையாளர் இந்த முயற்சியை நிராகரித்திருக்கிறார். இத்தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என ஜசெக உதவித் தலைவருமான குலசேகரன் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் குறித்து புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் பொங் குய் லானும், ஈப்போ தீமோர்  நாடாளுமன்ற உறுப்பினர் தோமஸ் சூவும், நானும் நாடாளுமன்ற இல்லத்தில் அமைச்சர் நஸ்ரியைச் சந்தித்துப் பேசியுள்ளோம் என்றும் அவர் ஆசிரமத்திற்கு வருகை தர உள்ளார் என்றும் குலசேகரன் கூறினார்.