கோலாலம்பூர் – 110 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமும், அதனைச் சுற்றியிருக்கும் நிலமும் பாரம்பரிய தளமாகவே நிலைநிறுத்தப்பட்டது.
விவேகானந்தா ஆசிரமத்தின் கட்டிடத்தை மட்டும் பாரம்பரியத் தளமாக அறிவிக்கும் படி தேசிய பாரம்பரிய துறையை வலியுறுத்தும் கோரிக்கையை அதன் உரிமையாளர் தாக்கல் செய்து, நீதித்துறை மறுஆய்வுக்கு அனுப்பியிருந்தார்.
ஆனால் நேற்று அதனை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஹனிபா ஃபரிகுல்லா அம்மனுவை நிராகரித்தார்.
இதன் மூலம், ஆசிரமத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கும் அரசாங்கத்தின் முடிவு நிலைக்கிறது.