Home அவசியம் படிக்க வேண்டியவை விவேகானந்தா ஆசிரமத்தைப் பாரம்பரியச் சின்னமாகப் பதிவு செய்ய அரசு நடவடிக்கை!

விவேகானந்தா ஆசிரமத்தைப் பாரம்பரியச் சின்னமாகப் பதிவு செய்ய அரசு நடவடிக்கை!

752
0
SHARE
Ad

Vivekananda_Ashramகோலாலம்பூர், ஜூலை 7 – தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள 110 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட விவேகானந்தா ஆசிரமத்தைப் பாரம்பரிய உடமையாக அறிவித்து அரசுப் பதிவேட்டில் வைக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்தத் தகவலைத் தேசியப் பாரம்பரிய ஆணையர் டாக்டர் ஜைனா இப்ராகிம் உறுதிப்படுத்தியுள்ளார். தேசியப் பாரம்பரியச் சட்டம் 2005, பிரிவு 31-ன் கீழ் இந்த ஆசிரமம் அரசுப் பதிவேட்டில் இடம்பெறுவது குறித்து கடந்த ஜூன் 24-ம் தேதி ஆசிரதமத்தின் அறங்காவலர்களுக்குத் தெரிவிக்கப்படுள்ளதாக ஜைனா இப்ராகிம் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரம அறங்காவலர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்த புதிய கட்டுப்பாடுகள் குறித்தும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் ஜைனா இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு ஆசிரமத்தைப் பண்பாட்டுப் புராதனச் சின்னமாக மாற்றப்படுவது குறித்து முடிவெடுக்கப்பட்டுவிட்டது. ஆசிரமத்தை அரசுப் பதிவேட்டில் இடம்பெறச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான அறிவிப்புகள் விரைவில் பத்திரிக்கைகளின் வாயிலாக வெளியிடப்படும் என்றும் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, விவேகானந்தா ஆசிரமத்திற்கு அருகே அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பாரம்பரியச் சின்னமான ஆசிரமத்தைப் பாதுகாக்கும் வகையில், ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆசிரமத்தின் முன் கூடி பேரணிகளை நடத்தினர்.

மேலும், ஆசிரம நிலம் விற்கப்பட முயற்சிகள் நடந்த போது, அதற்கு எதிராக 100,000-க்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டுத் தங்களது எதிர்புகளைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.