Home இந்தியா நூற்றாண்டில் இல்லாத அளவிற்கு வெயில் – சென்னை மக்கள் தவிப்பு!

நூற்றாண்டில் இல்லாத அளவிற்கு வெயில் – சென்னை மக்கள் தவிப்பு!

542
0
SHARE
Ad

2ee91c33-d7ec-4b5c-b620-33e641aedca3_S_secvpfசென்னை, ஜூலை 7 – கத்திரி வெயில் முடிந்து மாதக்கணக்கில் ஆகி, தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்கி நடந்து வந்தாலும், தமிழகத்தில் வெயில் விட்டபாடில்லை. தலைநகர் சென்னையில் நூற்றாண்டில் இல்லாத அளவிற்கு வெயில் மக்களைக் கடுமையாக வாட்டி வருகிறது.

சென்னை, மதுரை, திருச்சி , திருநெல்வேலி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக வெயில் சுட்டெரித்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

வெயிலின் தாக்கம் குறித்து சென்னை வாசிகள் கூறுகையில், “காலை 8 மணிக்கே கோடைக் காலம் போல வெயில் கொதிக்கிறது. எவ்வளவுதான் தண்ணீர், குளிர்பானங்கள் அருந்தினாலும் தாகம் நிற்பதில்லை. காரணம் அந்த அளவுக்கு வியர்வை வெளியேறுகிறது. குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பவர்கள் மட்டுமே இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்”

#TamilSchoolmychoice

“ஆனால் கட்டிடம் கட்டும் தொழிலாளர்களும், கூலி வேலை செய்பவர்களும் வெயிலின் கொடுமையால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக நுங்கம்பாக்கத்தில் 105.26 டிகிரி வெயிலும், மீனம்பாக்கத்தில் 104.54 டிகிரி வெயிலும் பதிவாகி உள்ளது. சென்னையில் கடந்த 1915-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தான் அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் பதிவானது. சுமார் நூறு ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது தான் வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

வெயிலின் தாக்கம் குறித்துச் சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியிருப்பதாவது:-

“கடந்த சில நாட்களாக வானம் தெளிவாக இருப்பதால் வெயிலின் தன்மை அதிகமாக உள்ளது. இந்தக் கடும் வெயில் இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்கும். எதிர்வரும் 9-ம் தேதிக்குப் பிறகு வெயில் தன்மை குறைந்து லேசாக சில இடங்களில் மழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளார்.