Home உலகம் பயங்கரவாத குழுக்களிடம் அணு ஆயுதங்கள் சிக்காமல் பாதுகாக்க வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்! 

பயங்கரவாத குழுக்களிடம் அணு ஆயுதங்கள் சிக்காமல் பாதுகாக்க வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்! 

569
0
SHARE
Ad

united-nationsநியூயார்க், நவம்பர் 6 – அணு ஆயுதங்கள் பயங்கரவாத குழுக்களின் பிடியில் சிக்காமல் பாதுகாக்க, உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில், இந்தியா சார்பாக வருடாந்திர அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- “அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் சிக்கும் அபாயம் தற்சமயம் ஏற்பட்டுள்ளது. இதை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்.”

“இல்லையெனில் உலக நாடுகள் பெரும் அபாயத்தில் சிக்க நேரிடும். அணு ஆயுதத் தீவிரவாதம் உருவாகி வருவதை உலக நாடுகள் ஒப்புக் கொள்ள வேண்டும். இது மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் சவால்.”

#TamilSchoolmychoice

“அணு ஆயுத பாதுகாப்பை வலுப்படுத்தவும், தீவிரவாதிகளின் பிடியில் சிக்காமல் பாதுகாக்கவும், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் முன்வரவேண்டும். இதற்காக எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. இதன் ஒரு பகுதியாகவே அணு ஆயுத பாதுகாப்பு நிதிக்கு இந்தியா தாமாக முன்வந்து நிதியுதவி அளித்துள்ளது.”

“இந்தியா, மின் உற்பத்திக்காக அணு சக்தியை பயன்படுத்தும் அதேவேளையில், அணு ஆயுதப் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளித்து வருகின்றது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.