கோலாலம்பூர், நவம்பர் 6 – கூட்டரசு நீதிமன்றத்தில் ஏழாவது நாளாக இன்று நடைபெற்று வரும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் மீதான ஓரினப்புணர்ச்சி வழக்கு 2 இன்று முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசு தரப்பு வழக்கறிஞர் முகமட் ஷஃபி அப்துல்லா எழுப்பிய அனைத்து வாதங்களுக்கும், அன்வார் தரப்பு வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்க இன்று தான் கடைசி நாள் என்றும் கூறப்படுகின்றது.
மலேசியாவின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகின்றது.
அரசு தரப்பும், அன்வார் தரப்பும் தங்களது வாதங்களை முன் வைக்க மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்வாருக்கு 5 வருட சிறை தண்டனை உறுதியாகுமா ?அல்லது விடுதலை ஆவாரா? என்பது இன்றைய தீர்ப்பை பொறுத்தே அமையவுள்ளது.
குறிப்பு: இந்த வழக்கு தொடர்பான முக்கிய செய்திகள் செல்லியலில் இன்று உடனுக்குடன் வெளியிடப்படும்.