Home கலை உலகம் காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை – நடிகர் கார்த்திக் விளக்கம்

காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை – நடிகர் கார்த்திக் விளக்கம்

532
0
SHARE
Ad

karthikசென்னை, நவம்பர் 6 – காங்கிரஸ் கட்சியில் தான் இணையவில்லை என்று நாடாளும் மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக், “எனது நாடாளும் மக்கள் கட்சியை கலைத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக யாரோ வதந்தியை கிளப்பிவிட்டுள்ளனர். நான் எனது கட்சியைக் கலைக்கவில்லை”.

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நான் ஆதரவு அளித்தேன். அதே ஆதரவு இப்போது தொடர்கிறது. மேலும் தற்போது தமிழக காங்கிரஸின் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவும், ஆதரவு குறித்து தெளிவுபடுத்தவும் தான் சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றேன்” என்றார்.

#TamilSchoolmychoice

முன்னதாக நடிகர் கார்த்திக் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது இந்த விளக்கத்தை கார்த்திக் அளித்துள்ளார்.