Home இந்தியா இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்துடன் இணைய இருக்கும் ரஷ்யா!

இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்துடன் இணைய இருக்கும் ரஷ்யா!

785
0
SHARE
Ad

make-in-indiaபுதுடெல்லி, நவம்பர் 7 – இந்தியாவின் முக்கிய வளர்ச்சித் திட்டமான ‘மேக் இன் இந்தியா’ -இந்தியாவில் தயாரியுங்கள் – (Make In India), ரஷ்யாவின் ஈஸ்டன் பிவாட் திட்டத்துடன்  இணைந்து செயல்பட இருப்பதாக இந்திய வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்து செயலாற்றி வருகிறார். அதில் மிக முக்கியத்துவம் பாய்ந்த ஒரு திட்டம் மேக் இன் இந்தியா.

அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் தேவையான உற்பத்தியை செய்து வர்த்தகம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் பெரும் முதலீடுகளை செய்துள்ளன. இந்த வரிசையில் தற்போது ரஷ்யாவும் இணைந்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த கூட்டு வர்த்தகத்தின் மூலம், மின் உற்பத்தி, இராணுவ விமானங்களை உருவாக்குதல் மற்றும் அணு சக்தி போன்ற திட்டங்களில் இந்தியா, ரஷ்யாவுடன் இணைய உள்ளது.

இது குறித்து ரஷ்யாவின் துணை பிரதமர் ரோகோஜின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் ஆகியோரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறையில் நேரடி உற்பத்தி:

இதுவரை இந்தியா பெரும்பாலான இராணுவ ஆயுதங்களை ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தது. இந்நிலையில், மேக் இன் இந்தியா திட்டம் மூலமாக, இந்தியா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஆயுதங்களை உற்பத்தி செய்ய இருக்கின்றது.

ஐந்தாம் தலைமுறை போர் விமான உற்பத்தியை இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனமும், ரஷ்யாவின் சுகோய் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்நிலையில், ரஷ்யாவின் முக்கிய ஆய்வுக் குழு ஒன்று 200 சுகோய் 30 ரக விமானங்களை கடந்த திங்கட்கிழமை மேற்பார்வை செய்தது. அக்குழுவின் ஒப்புதலின் பேரில், சுகோய் விமானங்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்திய இராணுவத்தில் இணைக்கப்படும் என்று கூறப்படுகின்றது.