Home நாடு அன்வார் வழக்கு தொடர்பில் கேலிச்சித்திர புத்தகங்களை விற்ற மூவர் கைது!

அன்வார் வழக்கு தொடர்பில் கேலிச்சித்திர புத்தகங்களை விற்ற மூவர் கைது!

470
0
SHARE
Ad

Zunar_Anwar_Comic_06112014கோலாலம்பூர், நவம்பர் 7 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி வழக்கு தொடர்பில் நீதித்துறை பற்றியும், நாட்டின் முக்கியத் தலைவர்கள் பற்றியும் கேலிச்சித்திரங்களைக் கொண்ட சர்ச்சைக்குரிய புத்தகங்களை விற்ற ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்களை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

புத்ராஜெயாவிலுள்ள நீதி அரண்மனையின் சுற்றுச் சுவருக்கு வெளியே சர்ச்சைக்குரிய கேலிச்சித்திர ஓவியர் சுல்கிப்ளி அன்வார் உல்லாவின் (ஸூமார்) புத்தகங்களை பார்வைக்கு வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை 6.50 மணிக்கு அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த புத்தகங்கள், அட்டைகள் மற்றும் கேலிச்சித்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

#TamilSchoolmychoice

கைது செய்யப்பட்ட மூவரும் மேல் விசாரணைக்காக புத்ராஜெயா காவல்துறை தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று புத்ராஜெயா காவல்துறையின் தலைமை துணை ஆணையர் அப்துல் ரசாக் அப்துல் மஜித் தெரிவித்துள்ளார்.

அந்த மூன்று பேரில் ஒருவர் ஸூமாரின் மனைவி என்றும் கூறப்படுகின்றது. எனினும் ஸூமாரின் பேஸ்புக் பக்கத்தில் அது அவரது மனைவி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அச்சுப்பதிப்பு மற்றும் பதிப்பகம் சட்டம் 1984, பிரிவு 2(3) -ன் கீழ் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.