Home கலை உலகம் கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு அவரின் சாதனைகளை சொல்லும் பாடல் – பாலன்ராஜ் குழுவினர் அசத்தல்

கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு அவரின் சாதனைகளை சொல்லும் பாடல் – பாலன்ராஜ் குழுவினர் அசத்தல்

1159
0
SHARE
Ad

Untitled

கோலாலம்பூர், நவம்பர் 7 – இன்று உலக நாயகன் கமல்ஹாசனின் 60 -வது பிறந்தநாளையொட்டி, உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து பிறந்தநாளை பேஸ்புக், டிவிட்டர் என நட்பு ஊடகங்களில் இனிதே கொண்டாடி வருகின்றனர்.

மலேசியக் கலையுலகில் எத்தனையோ கமல் ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் கமலின் மீது மிகுந்த ஈடுபாடும், அவரது திரைப்படங்களின் அதிதீவிர ரசிகருமான மலேசிய இசையமைப்பாளர் பாலன்ராஜ் கமல் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாடல் ஒன்றை, தனது குழுவினரான ஜெகதீஸ், ஹஸ்மிதா செல்வம், மிஸ்டா கேரி ஆகியோருடன் இணைந்து தானே தயாரித்து, இசையமைத்து, பாடி, வரிகளும் எழுதியுள்ளார்.

#TamilSchoolmychoice

மூன்று பேர் பாடுவது போல் அமைந்துள்ள இந்த பாடலில், கமலின் சாதனைகளை சொல்வது போன்ற வரிகளும், பின்னணியில் கமலஹாசன் நடித்த படங்களில் காட்சிகளும் இடம் பெறுகின்றன.

செய்தி – ஃபீனிக்ஸ்தாசன்

அந்தப் பாடல் உங்கள் பார்வைக்கு: