Home வணிகம்/தொழில் நுட்பம் மாஸ் குறித்த கசானாவின் கோரிக்கையை ஒப்புக்கொண்ட சிறு பங்குதாரர்கள்! 

மாஸ் குறித்த கசானாவின் கோரிக்கையை ஒப்புக்கொண்ட சிறு பங்குதாரர்கள்! 

446
0
SHARE
Ad

masகோலாலம்பூர், நவம்பர் 7 – மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் கசானா நிறுவனத்தின் கோரிக்கையை மாஸின் சிறு பங்குதாரர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு பங்கு ஒன்றிற்கு 27 காசு வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.

நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ், இந்த வருடத்தில் நடந்த இரு பெரும் பேரிடர்களால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.

தனியார் மயமாதல் அல்லது ‘திவால்’ (Bankruptcy ) என்ற இரு வழிகளைத் தவிர மாஸ் நிறுவனத்திற்கு வேறு வழி இல்லாத காரணத்தால், மாஸின் முக்கிய பங்குதாரரான கசானா நேசனல் நிறுவனம், மாஸை தனியார் மயமாக்க முடிவெடுத்தது. இதற்கான முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் நேற்று நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இந்தக் கூட்டத்தில் மாஸ் நிறுவனத்தை சீரமைக்க கசானா நிறுவனம், 6 பில்லியன் ரிங்கிட் மதிப்பு கொண்ட 12 அம்ச மறு சீரமைப்புத் திட்டத்தை மற்ற பங்குதாரர்கள் முன்னிலையில் வலியுறுத்தியது.

இதன் முக்கிய அம்சமாக, சிறு பங்குதாரர்களுக்கு  பங்கு ஒன்றிற்கு 27 காசு மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவித்து இருந்தது. இதனை தொடக்கத்தில் மறுத்த சில பங்குதாரர்கள் பின்னர் ஒப்புக் கொண்டனர். கஸானாவின் இந்த திட்டத்திற்கு பெரும்பான்மையான (93.3 சதவீதம் பேர்) பங்குதாரர்கள் ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

கசானாவின் இந்த கோரிக்கை தொடர்பாக நிதி அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டன்ஸ்ரீ அப்துல்லா முகம்மத் இர்வான் செரிகர் கூறுகையில், “பங்கு ஒன்றிற்கு 27 காசு என்பது இது போன்ற தருணத்தில் ஏற்புடையதாகவே உள்ளது” என்று கூறியுள்ளார்.