Home நாடு பட்டர்வொர்த்தில் வைகோ நிகழ்த்தும் இலக்கியப் பேருரை!

பட்டர்வொர்த்தில் வைகோ நிகழ்த்தும் இலக்கியப் பேருரை!

549
0
SHARE
Ad

vaikoபட்டர்வொர்த், நவம்பர் 7 – பட்டர்வொர்த் நகரில் ஜாலான் மெங்குவாங் சாலையில் அமைந்திருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் வரும் 11.11.2014 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு தொடங்கி, தமிழகத்தின் சிறந்த பேச்சாளரும், மதிமுக கட்சியில் பொதுச் செயலாளருமான வைகோ நிகழ்த்தும் “அடையாளத்தைத் தேடி” என்ற தலைப்பிலான இலக்கியப் பேருரை நடைபெறவிருக்கிறது.

பினாங்கு தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் செ.குணாளன் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ப.ராமசாமி, மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் மத்திய மற்றும் மாநில ஆட்சிமன்ற உறுப்பினர் டத்தோ கா.புலவேந்திரன், மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன், பட்டர்வொர்த் சமூகவியல் நற்பணித் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். அருணாச்சலம் ஆகிய பிரமுகர்கள் சிறப்பு வருகை புரிவர்.

இந்நிகழ்ச்சியில், இயக்க உறுப்பினர் கு.கிருஷ்ணசாமி அறிவிப்பாளராக செயல்படுவார் என்றும் பரதம், இன்னிசை பாடல்கள் ஆகிய அங்கங்கள் இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பரவசப்படுத்தி மகிழ வைக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

உலகளாவிய நிலையில் தமிழர் நலனுக்காக அஞ்சாமல் குரல் எழுப்புவதில் முன்னணி வகித்து வரும் வைகோ, எண்ணற்ற தமிழ் நெஞ்சங்களை கவர்ந்திருக்கும் நிலையில், அவர் ஆற்றவிருக்கும் இந்த இலக்கியப் பேருரை தமிழ் ஆர்வலர்களுக்கு நல்லதொரு படைப்பாக பயனளிக்குமென்று தாம் பெரிதும் நம்புவதால், அனைவரும் திரளாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று குணாளன் அழைப்பு விடுத்துள்ளார்.