Home வாழ் நலம் காய்ச்சலை குணப்படுத்தும் சீதாப்பழம்!

காய்ச்சலை குணப்படுத்தும் சீதாப்பழம்!

1418
0
SHARE
Ad

OLYMPUS DIGITAL CAMERAநவம்பர் 7 – பட்டர் ஆப்பிள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்க இனிய பழமாகும். அதிக அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது.

வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீதாப்பழம், சிறு மர வகையைச் சார்ந்தது. சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.

#TamilSchoolmychoice

custard-appleசீத்தாப்பழத்திந் மருத்துவ பயன்கள்:

*சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

*சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து புண்கள் மேல் தடவினால் புண்கள் ஆறும். அதே போல் இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.

*விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் இல்லாமலாகிவிடும்.

*சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

seetha*சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

*சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

*சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும்.

*சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் குணமாகும்.