Home உலகம் ஈராக்கில் சிறுமிகளை கடத்தி விலைபேசி விற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்!

ஈராக்கில் சிறுமிகளை கடத்தி விலைபேசி விற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்!

568
0
SHARE
Ad

isis_girlஈராக், நவம்பர் 7 – ஈராக்கில் உள்ள சின்சார் மலை பகுதியில் யாஷிடி என்ற பழங்குடி மதத்தினர் வசித்து வந்தனர். இந்த மலை பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினார்கள்.

அங்குள்ள மக்களை முஸ்லிம் மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்தி, மதம் மாற மறுத்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாஷிடியினர் பெண்கள் மற்றும் சிறுமிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களில் பெண்களை தீவிரவாதிகள் சிலர் திருமணம் செய்திருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

isis-iraqமேலும் சிறுமிகளை அவர்கள் விலைபேசி விற்பதாகவும், நீல நிற கண்கள் உடைய அழகான சிறுமிகளை அதிக விலைக்கு விற்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

அதில் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள யாஷிடி சிறுமிகளை விலைபேசி விற்பது சம்மந்தமாக பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.