மலேசியாவுடனான வர்த்தகம் தொடர்பாக அமெரிக்கத் தூதரகப் பணிகளின் துணைத் தலைவர் எட்கார்ட் டி. ககன் கூறுகையில், “சீனாவிற்கு அடுத்ததாக ஆசிய அளவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு வர்த்தகம் செய்ய சிறந்த இடமாக மலேசியா உருவெடுத்துள்ளது.”
“மலேசியாவின் சட்டதிட்டங்கள் மற்றும் உள்கட்டுமானங்கள், புவியியல் சார்ந்த அமைப்பு, திறன், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (R & D) நடவடிக்கைகள் மற்றும் திறமையான தொழிலாளர்கள் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் மலேசியா சிறந்து விளங்குகிறது. குறிப்பாக பினாங்கு பகுதி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவுகளுக்கு சிறந்த இடமாக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
உலக அளவில் அமெரிக்காவின் சிறந்த வர்த்தகத் சந்தைகளுள், மலேசியா 22-வது இடத்தைப் பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற வர்த்தகத்தின் மதிப்பு 44.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது வரும் ஆண்டுகளில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.