Home கலை உலகம் கமல் பிறந்த நாள் – ஏரி தூய்மைப் படுத்தும் படக் காட்சிகள்!

கமல் பிறந்த நாள் – ஏரி தூய்மைப் படுத்தும் படக் காட்சிகள்!

640
0
SHARE
Ad

சென்னை, நவம்பர் 8 – நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகர் கமல்ஹாசன், சென்னையில் உள்ள ஒரு ஏரியையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் தனது இரசிகர்களோடு தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டார்.

Kamal Haasan launching lake cleaning

தனது தூய்மைப் பணிகளுக்கு முன்னால் இரசிகர்களிடையே உரையாற்றும் கமல்…

#TamilSchoolmychoice

இந்தியாவைத் தூய்மைப் படுத்துவோம் என அறிவித்த பிரதமர் மோடி, அந்த முயற்சியில் தன்னோடு இணைந்து கொள்ள அழைப்பு விடுத்த பிரபலங்களில் கமல்ஹாசனும் ஒருவர்.

அதனை முன்னிட்டு இந்த முறை தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையை அடுத்துள்ள மாடம்பாக்கம் ஏரியின் சுற்றுப் புறங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகளை தனது இரசிகர்களோடு கமல் மேற்கொண்டார்.

Kamal Birthday cleaning lake 7 Nov 2014

 ஒரு மூதாட்டிக்கு உதவி வழங்கும் கமல். அருகில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்…

மேலும் வசதி குறைந்தவர்களுக்காக தனது நற்பணி மன்றத்தின் மூலமாக சில உதவிகளையும் கமல் வழங்கினார்.

அந்த நிகழ்வுகளின் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

Kamal Haasan launching lake cleaning movement 7 Nov 2014

கமலுக்கு மாலை அணிவித்து வாழ்த்தும், வரவேற்பும்….

Kamal Haasan talking to old lady launching lake cleaning 7 Nov 2014

உதவி பெற்ற மூதாட்டி ஒருவருடன் உரையாடும் கமல்…

Kamal Haasan with fans launching lake cleaning 7 Nov 2014

கையில் வாளியுடன் தூய்மைப்படுத்தும் பணிகளுக்காக களமிறங்கும் கமல்ஹாசன்…