Home நாடு லீ சோங் வெய் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதியானது!

லீ சோங் வெய் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதியானது!

572
0
SHARE
Ad

doc6h9n2po16831ifpf37ww

கோலாலம்பூர், நவம்பர் 8 – மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற பூப்பந்து விளையாட்டாளரான டத்தோ லீ சோங் வெய்யின் ‘பி’ இரத்த மாதிரியில் ‘டெக்சாமெதாசோன்’ என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் புக்கிட் கியாராவிலுள்ள மலேசிய பூப்பந்து விளையாட்டாளர் சங்கம் (Badminton Association of Malaysia )இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த குற்றத்திற்காக லீ சோங் வெய்க்கு இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்படலாம்.

எனினும், அவர் தன் மீது நிரூபிக்கப்பட்டுள்ள குற்றத்திற்கு மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.